ஜூலிக்கு நடந்த அறுவை சிகிச்சை....பதறி துடித்த ரசிகர்கள்! மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம்
பிக் பாஸ் புகழ் ஜூலிக்கு திடீரென்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்களை ஜூலி வெளியிட்டுள்ளார்.
இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஜூலிக்கு நடந்த அறுவை சிகிச்சை
இது குறித்து ஜூலி புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.
அதாவது, தனது Lasic Surgery வெற்றிகரமாக முடிந்தது என்றும் அதுபற்றி விசாரித்த ரசிகர்களுக்கு நன்றி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Lasic Surgery என்றால் என்ன?
கண் பார்வை பிரச்சனைக்கு செய்யப்படும் லேசர் அறுவை சிகிச்சை தான் LASIC.
(Laser-Assisted In Situ Keratomilensis) என்பதன் சுருக்கம் தான் LASIC.
கண்ணாடி மற்றும் லென்ஸ் போட்டுக் கொள்ளாமல் பார்வை கோளாறு பிரச்சனையை இதன் மூலம் சரி செய்துக் கொள்ள முடியும்.
தற்போது அந்த சிகிச்சையைத் தான் ஜூலி செய்துள்ளார்.
ஏற்கனவே ரம்யா பாண்டியன் இதே சிகிச்சையை செய்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.