வாய ஒடச்சி கைல கொடுத்துடுவேன்...கொதித்தெழுந்த ஜூலி!
ஜூலி நிரூப்பை ஆவேசமாக திட்டும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது.
அது என்னவென்றால், நிகழ்ச்சியில் ஜூலி, நிரூப்பை பார்த்து என் கேரக்டர் பத்தி பேச உனக்கு எந்த ரைட்ஸ்ஸும் கிடையாது, வாயெல்லாம் ஒடச்சி கைல கொடுத்துடுவேன் என்று சொல்கிறார். உடனே நிரூப், எனக்கு பஞ்ச் பண்ண விருப்பம் இல்லை என்று அமைதியாக இருக்கிறார்.
இப்படி இவர்கள் பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பே வனிதா, நிரூப்பை பயங்கரமாக திட்டி இருந்தார்.
Julie dealing man child in the right way ???
— Stone Heart (@Stonecoldhrt) March 1, 2022
Spot the real sombu here makkaley.
100 marks for spotting ?#BiggBossTamil #BBUltimate #BiggBossUltimate pic.twitter.com/FVY5i429TH
அப்போதும் நிரூப் எதுவுமே பேசவில்லை, அமைதியாகத்தான் இருந்தார். தற்போது ஜூலி பேசும் போதும் நிரூப் பெரிதாக சண்டை போடாமல் அமைதியாக இருக்கிறார்.
ஆனால், இது நிரூப் உடைய குணமே இல்லை. நிரூப் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இருக்கும் போது பயங்கரமாக எல்லோரிடமும் சண்டை போட்டிருந்தார். குறிப்பாக அவருடைய தோழி பிரியங்காவிடம் கலவரமே நடத்தி இருந்தார்.
இப்படி இருக்கும் நிரூப் அல்டிமேட் நிகழ்ச்சியில் கவனமாக விளையாடுகிறாரோ? என்ற சந்தேகம் வருகிறது.
#Niroop vs #Vanitha at #BBUltimate!! Streaming on @disneyplusHSTam
— Kolly Buzz (@KollyBuzz) February 22, 2022
pic.twitter.com/PEx7v5yiEp
அதுமட்டுமில்லாமல் ஜூலியும் அபிராமியும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். அபிராமிக்கு யாரு எல்லாம் பிடிக்கவில்லையோ, ஜூலி அவர்களிடம் பேசுவது கிடையாது.
அதே போல் நாமினேஷனில் கூட அபிராமி யாரை நாமினேட் செய்தாரோ, ஜூலியும் அவர்களே தான் செய்திருந்தார். குறிப்பாக அபிராமி நிரூப்பை நாமினேட் பண்ணி இருந்தார்.
ஜூலியும் எனக்கு நிரூப்பை சுத்தமாகவே பிடிக்கவில்லை என்று நாமினேட் செய்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஜூலி, நிரூப்பை ஆவேசமாக திட்டி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பரவலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் நிரூப் கேம் விளையாடுகிறாரா? அவர் இப்படி இருக்கவே மாட்டாரே? இது அவருடைய குணமே இல்லையே என்றெல்லாம் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.