சண்டைக்கு பின்பு ஜோவிகா என்ன செய்தார்? மீம் கிரியோட்டர்களுக்கு தீனி போட்ட மாஸான காட்சி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மரியாதை இல்லாமல் பேசி வெளுத்து வாங்கிய ஜோவிகா சோர்வில் தூங்கிய காட்சி இணையத்தில் தெறிக்கவிட்டுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த ஞாயிற்று கிழமை ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் தொகுப்பாளராக இந்த ஆண்டும் கமல்ஹாசனே இருந்து வருகின்றார். உள்ளே சென்ற முதல் நாளே 6 போட்டியாளர்கள் வேறு வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே சண்டையும், சச்சரவுமாக ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில் இன்று மாஸாக இருப்பது வனிதாவின் மகள் ஜோவிகா தான்.
படிப்பு விடயமாக விசித்ராவிற்கும் ஜோவிகாவிற்கும் ஆரம்பித்த சண்டை பயங்கரமாக சென்றுள்ளது. இதனால் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியை காண்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.
பயங்கர சண்டையை முடித்த பின்பு ஜோவிகா வெளியில் அமர்ந்து ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுள்ளார். இதனை அவதானித்த பூர்ணிமா மற்றும் மாயா பிக்பாஸிடம் மாட்டிவிட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் 10 வரை சொல்லும் முன்பு நாய் குரைக்க வேண்டும் என்று பிக்பாஸிடம் கூறியுள்ள நம்பரை கூற ஆரம்பித்தனர். ஆனால் நாய் குரைக்கவில்லை.
பின்பு இரண்டாவது முறையும் எண்களை கூற சுதாரித்த பிக்பாஸ் நாய் குரைக்க வைத்துள்ளார். உடனே ஜோவிகா பயங்கர கடுப்பில் சீறியவாறு கண்விழித்துள்ளார்.
இந்த காட்சியை கையில் எடுத்திருக்கும் நெட்டிசன்கள் மீம்களை தட்டித் தூக்கி பரப்பி வருகின்றனர்.
#Jovika kutty ipdiya ma thunguve ??
— Ellam Nanmaikke ? (@dongryravai) October 6, 2023
Evanda naai A koraika vittathu ??#biggbosstamil #BiggBoss7tamil #BiggBossTamil7 pic.twitter.com/6k6OVAE3ft
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |