ஆத்தா வாயாட்டத்தை நிப்பாட்டு… மேடையில் வந்து ஆடு... ஷாக்கான ரம்யா கிருஷ்ணன்!
போன எபிஷோடுக்கே பயந்துக்கிட்டு வரல, இப்பவாவது வருவீங்களா என வனிதா கேட்க, அதற்கு சுரேஷ் ஆத்தா வாயாட்டத்தை நிப்பாட்டிட்டு இந்த மேடையில் வந்து ஆடுங்க பார்ப்போம் என வனிதாவை கலாய்த்துள்ளார்.
பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதாவை சுரேஷ் சக்ரவர்த்தி கலாய்த்திருப்பது, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவி தற்போது பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
adra adra adra #Kuraishi! 😂#BB ஜோடிகள் - வரும் ஞாயிறு இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBJodigal #BiggBossJodigal #VijayTelevision pic.twitter.com/YuduBAXJuz
— Vijay Television (@vijaytelevision) June 23, 2021
இந்நிகழ்ச்சியில் இந்த வார நிகழ்ச்சிக்கான ப்ரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், வனிதா மற்றும் சுரேஷின் ஆட்டத்தை பார்த்து விட்டு சூப்பர் என சொல்லும் ரம்யா கிருஷ்ணன், உங்களிடம் நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன் என நல்லாவே கலாய்த்தும் உள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நிகழ்ச்சியை பார்ப்பதற்கான ஆர்வத்தை தூண்டியுள்ளது.