எல்லைமீறி பேசிய அசீம்! கதறி கதறி அழுத ஜனனி: முதல்நாளே பயங்கர சண்டை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஜனனி அசீம் செய்த காரியத்தால் கதறி அழுதுள்ளார்.
ஜனனிக்கு நடந்தது என்ன?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று டாஸ்க் ஒன்றினைக் கொடுத்துள்ளார். இதில் போட்டியாளர்கள் ஏலியனாகவும், சில போட்டியாளர்கள் பழங்குடியின மக்களாகவும் இருந்து விளையாடி வருகின்றனர்.
இன்றைய ஆரம்பத்திலேயே ஷிவினின் தாய் குறித்து தனலட்சுமி பேசி அவரை அழ வைத்தார். பின்பு ஜனனி அசீம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இறுதியில் ஜனனி ஏலியனாக இருந்த நிலையில், பின்பு பழங்குடியின மக்களாக மாறினார். ஆனாலும் அவ்வாறு மாறிய பின்பு ஜனனி சோகமாகவே காணப்பட்டார்.
அசீம் ஜனனியைப் பற்றி பேசியுள்ளார். ஜனனியை இங்கே எடுத்தாச்சி... ஆனால் அமுதவானன் மற்றும் தனலட்சுமிக்காக விளையாடுவார்... படுத்து தூங்குவார்... என்று பேசியுள்ளார்.
இதனை ஜனனியிடம் ஷிவின் கூறிய நிலையில், அவர் சக போட்டியாளர்களிடம் கதறி அழுதுள்ளார்.