பாவமாக காணப்பட்ட இலங்கை பெண்: நிவா செய்த மோசமான காரியம்! வருத்தத்தில் ரசிகர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனி மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் காணப்பட்டது ரசிகர்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜனனி நிவா பிக் பாஸ் வைத்த போட்டியில் வெற்றி பெற்றனர். இதற்கு பிக் பாஸ் இரண்டு பேருக்கும் கிராட்ச் கார்டு ஒன்று கொடுத்துள்ளார்.
இதில் நிவாவிற்கு வீட்டில் இருந்து சாப்பாடு வரும் என்று கூறினார். ஜனனிக்கு அவர் கூறும் மெனு பிக்பாஸ் வீட்டில் சமைக்கப்படும் என்று வந்துள்ளது.
ஆனால் ஜனனி வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தானே செய்ய முடியும் என்று காலைக்கு உப்புமா, மதியம் தயிர் சாதம், பாகற்காய் மற்றும் முள்ளங்கி கறி, இரவுக்கு கோதுதை தோசை என்று கூறினார்.
எனக்கு சாப்பிட ஆசையான சாப்பாடு காலையில இட்லி சாப்பிடனும், மதியம் சிக்கன் பிரியாணி சாப்பிடனும், இரவு நூடுல்ஸ் சாப்பிடனும்னு ஆசையா இருக்குது ஆனால் இங்க இல்லை என்று வருத்தத்துடன் கமெரா முன்பு கூறினார்.
நிவாவிற்கு வீட்டிலிருந்து வந்த சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டிருந்தார். நிவாவிடம் சென்று ஜனனியும் உங்களுக்கு எதாவது சாப்பாடு வேணுமா என்று கேட்டதற்கு நிவா தனக்கு வீட்டிலிருந்து வந்துள்ளதாக கூறினார்.
நிவா சாப்பிடும் போது குயின்ஸி, ராபர்ட், மைனா, மணிகண்டன், அமுதவானன், தனலட்சுமி என அனைவருக்குமே கொடுத்துள்ளார். ஆனால் ஜனனிக்கு கொஞ்சம் கூட டேஸ்ட் செய்வதற்கு கூட கொடுக்கவில்லை... அந்த தருணத்தில் ஜனனியை பார்ப்பதற்கு பாவமாக இருந்துள்ள நிலையில், ரசிகர்களும் வருத்தத்தில் காணப்படுகின்றனர்.