கெத்தாக போஸ் கொடுக்கும் இலங்கை பெண்! பொறாமையை கிளப்பும் புகைப்படங்கள்
மாலில் கெத்தாக போஸ் கொடுக்கும் ஜனனியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மீடியாத்துறைக்கு வந்தது எப்படி?
இலங்கையில் தனியார் தொலைக்காட்சியொன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியவர் தான் ஜனனி. இவரின் தீவிர முயற்சியாலும், சினிமா மீதுள்ள பற்றினாலும் இவர் பிக் பாஸ் சீசன் 6 க்கு தெரிவு செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து தற்போது இந்தியாவிலிருக்கும் பாதி அண்ணாமார்களின் மனதில் குட்டி தங்கையாகவும், இளைஞர்களின் குயினாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஜனனியில் சில கியூட் ரியாக்ஷன்கள் ட்ரோல் செய்யப்பட்ட நிலையில் ஜனனி பிரபலமாவதற்கு இது ஒரு ஊற்று கோளாக இருந்துள்ளது.
மார்டன் ஆடையில் கெத்தாக இருக்கும் ஜனனி
இந்நிலையில் தற்போது அவரது சமூக வலைத்தளப்பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தினமும் ஒரு புகைப்படம் என்ற அடிப்படையில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதன்படி, சமீபத்தில் மாலில் கெத்தாக நின்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்ற புகைப்படமொன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்க்கும் போது நாளுக்கு நாள் ஜனனியின் அழகு கூடிக் கொண்டே போகிறது தெளிவாகிறது. இதனை பார்த்த இணையவாசிகள், “ சேலையை விட மார்டன் ஆடையில் ஜனனி அழகாக இருக்கிறார்” என கமண்ட் செய்து வருகிறார்.