இலங்கை பெண் ஜனனியின் சொந்த வீடா இது? காட்டுத் தீயாய் பரவி வரும் புகைப்படம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் இலங்கை பெண் ஜனனியின் வீட்டின் புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பு குறையாமல் சென்று கொண்டிருக்கின்றது.
மூன்று நாளாக எந்த சண்டையும் சர்ச்சையும் இல்லாமல் அமைதியாக இருந்த நிலையில் தற்போது ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க்கை கொடுத்து பிக் பாஸ் வீட்டையே ரணகளப்படுத்தியுள்ளார்.
மீ்ண்டும் வெடித்த சண்டை
அதிலும் குறிப்பாக இலங்கை பெண்ணின் குரலை இன்று பார்க்க முடிந்தது.
ஜனனி இதுவரை வாயில்லா பூச்சியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த நிலையில், செந்தமிழ் பிரச்சனையில் விக்ரமனுக்கு எதிராக அசீமுடன் சேர்ந்து செயற்பட்டார்.
அசீமை எதிர்த்தே சண்டை போடும் அளவுக்கு சென்று விட்டார்.
இலங்கை பெண் ஜனனியின் வீடு
இதேவேளை, பிக் பாஸ் வீட்டில் குட்டிப் பெண்ணாக இருந்த ஜனனிக்கு ஆரம்பத்தில் வரவேற்பு அதிகமாக இருந்தது. ஆனால், நாட்கள் போக போக ஆர்மியே கடுப்பாகும் அளவுக்கு ஜனனி மாறி வருகின்றார்.
இந்த நிலையில் தற்போது இலங்கை பெண் ஜனனியின் வீட்டை ரசிகர்கள் தேடி கண்டுப்பிடித்து வைரலாக்கி வருகின்றனர்.