இலங்கை பெண்ணிற்குள் இப்படியொரு சோகமா? அசீமைத் தொடர்ந்து ஜனனியை அழவைத்த போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் அசீமைத் தொடர்ந்து இலங்கை பெண் ஜனனி சக போட்டியாளர்களால் கண்கலங்கியுள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 9ம் தேதி கோலாகலமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் நிகழ்ச்ச்யில் 20 போட்டியாளர்கள் முதலில் கலந்து கொண்டனர். பின்பு சில தினங்களுக்கு முன்பு வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா நந்தினி கலந்து கொண்டார்.
நேற்று நடத்தப்பட்ட தலைவர் பதவி போட்டிக்கு சாந்தி, ஜனனி, ஜிபி இவர்கள் கலந்து கொண்டு ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டின் முதல் தலைவரானார்.
பிக்பாஸ் தலைவரை சக போட்டியாளர்கள் படாதபாடு படுத்தி எடுத்தனர். மேலும் ஜிபி முத்துவால் பிக்பாஸ் வீடு மட்டுமின்றி பார்வையாளர்களும் பிக்பாஸ் பார்ப்பதற்கு பயங்கர ஆர்வமாக இருக்கின்றனர்.
கண்கலங்கிய இலங்கை பெண்
இன்று வெளியான ப்ரொமோ காட்சியில், புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் நேரம் என்ற பெயரில் ஆரம்பமான டாஸ்க், முதலில் அசீம் தனது கதையை கூறியதற்கு பின்பு ஜனனி தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோவில் கூறியுள்ளார்.
இந்த டாஸ்க்கில் குறித்த நேரத்திற்குள் கதையை முடிக்கும் நபர்கள் அடுத்த வார நாமினேஷனிலிருந்து விடுபடுவார்கள் என்று பிக்பாஸ் கூறியுள்ளார்.
முதலில் அசீம் கூறிய கதையை கேட்க மறுத்து 3 பெண் போட்டியாளர்கள் அவரை வெளியே வர வைத்த நிலையில், தற்போது இலங்கை பெண் ஜனனியின் கதையைக் கேட்கும் முன்பும் போட்டியாளர்கள் பசரை அழுத்தி நிறுத்தியுள்ளனர்.
இதில் அப்செட் ஆன ஜனனி வெளியே வந்து அழுதுள்ள நிலையில் சக போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தியுள்ளனர்.