பிக்பாஸ் வீட்டில் அதிகம் புரளி பேசுபவர் அசீம் தான்! சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கலாய்த்த அமுதவாணன்
பிக்பாஸ் வீட்டில் அதிகமாக மற்றவர்களை பற்றி புரளி பேசுபவர் யார் என்ற கேள்விக்கு அசீம் மற்றும் விக்ரமன் இருவரும் மாறி மாறி சண்டை பிடித்துள்ளார்கள்.
பிக்பாஸ் சீசன் 6ன் டைட்டில் வின்னர்
பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சிகளில் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் பங்கேற்றப் போட்டியாளர்களில் அசீம் அவர்கள் டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இதனால் விக்ரமனுக்கு ஆதரவாக இருந்த போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் என பல தரப்புகளிலிருந்து அசீமிற்கு எதிராக பல சர்ச்சையான கருத்துக்கள் எழுந்து வருகிறது.
இதற்கு அசீமுடன் தனலெட்சுமி இருந்து அணைவருக்கும் தக்க பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
ஆனாலும் நாளுக்கு நாள் தொலைக்காட்சிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வீடியோக்கள் , மீம்கள், ட்ரோல்கள் என அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அமுதவாணனின் தூண்டுதலால் மோதிக்கொள்ளும் பிரபலங்கள்
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 ல் கலந்துக் கொண்ட போட்டியாளர்களை வரவழைத்து பிபி கொண்டாட்டங்கள் என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் அசீம் உட்பட அணைத்து பிரபலங்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளார்கள். அதில், “ பிக் பாஸ் வீட்டில் மற்றவர்கள் பற்றி அதிகம் புரளி பேசுபவர் யார்” என்று கேள்வி கேட்ட போது, விக்ரமன் அசீம் எனவும், அதற்கு அசீம் அதைய யார் சொல்றாங்க பாருங்க ” எனவும் மாறி மாறி கூறியிருக்கிறார்கள்.
இந்த கேள்வி கேட்கும் போது அமுதவாணன் அசீமை பார்த்து உனக்கு மட்டும் தான் இந்த மாதிரி சரியா வருது” என கலாய்த்துள்ளார்.
அமுதவாணனின் இந்த தூண்டுதலால் அனைத்து போட்டியாளர்களும் அசீமை பார்த்து சிரித்து கடுப்பேத்தியுள்ளார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ அமுதவாணணுக்கு இதே வேளை தான்” என வறுத்தெடுத்துள்ளார்கள்.
Enda unakulam soranaiyae illaya ???,
— தமிழ் ? (@AchillesTamizh) February 9, 2023
Boomer kilikapattan ???#VanmamVikraman #MakkalNayaganAzeem #Biggbosstamil6 pic.twitter.com/Kl0y5T5AYv