ஹரிஷ் - விஷ்ணு இடையில் உண்மையில் என்ன உறவு.. வெளிச்சம் போட்டு காட்டிய ட்ரோலர்ஸ்!
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் விஷ்ணு - ஹரிஷ் கல்யாணுடன் என்ன உறவு என்பதனை ஓபனாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் 7
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 60 நாட்களை கடந்து இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதில் அனன்யா, பவா, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, பிராவோ, அக்ஷ்யா ஆகியோர் வெளியேற்றப்பட்டார்கள்.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் கொடுக்கப்பட்ட பூகம்பம் டாஸ்க்கில் இரண்டு டாஸ்க்கில் தோற்ற காரணத்தினால் வைல்ட் கார்ட் என்றியாக அனன்யா மற்றும் விஜய் வர்மா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
இந்த வாரம் நிக்ஸன் தலைவரானார். வழக்கம் போல் பிக் பாஸ் வீட்டில் டாஸ்குகள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
"எபிசோடில் பார்க்கிங் " படத்தை ப்ரோமோட் செய்வதற்காக இந்துஜா, ஹரிஷ் கல்யாண் ஆகியோர் வருகை தந்துள்ளனர். சில மணி நேரங்கள் போட்டியாளர்களுடன் சாலியாக விளையாடி விட்டு வெளியேறி விட்டார்கள்.
வசமாக சிக்கிய விஷ்ணு
இந்த நிலையில் விஷ்ணு, மணியிடம் “ ஹரிஷ் என்னுடைய நண்பன் தெரியுமா? நாங்கள் இருவரும் நல்ல நட்பாக பழகிருந்தோம். ரொம்ப குளோசாக இருந்தோம் ” என கூறியுள்ளார்.
இந்த காட்சியை பார்த்த ஹரிஷ் கல்யாண், “ சபாஆஆ முடியலடா” என்று கிண்டல் செய்யும் வகையில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.
இந்த பதிவை தொடர்ந்து விஷ்ணு - மணியிடம் பொய் தான் கூறியிருக்கிறார் என்பது தெளிவாகின்றது. மேலும் நெட்டிசன்கள் கையில் சிக்கிய விஷ்ணு சிக்கி பங்கமாக கலாய்த்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.
விஷ்ணு ஆண்களிடம் சண்டை போடுவதை விட பெண்களிடம் தான் அதிகமான வாக்குவாதங்களில் ஈடுபடுகிறார். அர்ச்சனாவுடன் இன்றைய தினம் சண்டையிட்டு கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து விஷ்ணுவின் ஆட்டம் எப்படி இருக்க போகிறது என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
#Vishnu : Actor #HarishKalayan is My Friend. That's why he Gives Star to me ?
— Rohit Gopi (@itsgopi45) November 30, 2023
Audience: இந்த விசயம் Harish ku தெரியுமா ????#BiggBoss7 #BiggBoss7Tamil#BiggBossTamil7 #BiggBossTamil#BiggBossTamilSeason7 #Vichitra#VJArchana #Dinesh #Pradeeppic.twitter.com/ejyIS2wyAv
Vishnu vs Harish Kalyan - The Real Friendship Story ?
— Bad Boss (@StoryTimeWithK) November 30, 2023
Reasons why Vishnu is GOAT ???#VJArchana fans please oramaa ponga ?#BiggBossTamil #biggbosstamil7 #Dinesh #maya #Poornima #vichithra #VJArchana #Raveena #Nixen #Mani #Pradeep #coolsuresh @iamharishkalyan pic.twitter.com/pcALCNsyg8
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |