பிக்பாஸில் ஏற்பட்ட பயங்கர மோதல்! அமுதவானனை அடித்தாரா மணி?
பிக்பாஸ் வீட்டில் நடைபெற்று வரும் டாஸ்கினால் போட்டியாளர்களிடையே கடும் சண்டை நிலவி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் பொம்மை டாஸ்க் நடைபெற்ற நிலையில், இந்த வாரம் இனிப்பு கம்பெனியாக மாறியுள்ளது.
இதில் போட்டியாளர்கள் பங்கர சண்டை போட்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஜனனியின் பேச்சால் ஏடிகே மிகவும் கொதித்தெழுந்ததோடு, மனவருத்தம் அடைந்தார்.
பின்பு ஜனனி ஏடிகே-யிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சியில் பிக்பாஸ் அனுப்பும் பெட்டி எடுப்பதற்கு பங்கர சண்டை எழுந்துள்ளது.
அசீம் எடுக்க சென்ற பெட்டி அமுதவாணன், கதிரவன், மணி இவர்கள் வலுக்கட்டாயமாக பறித்த நிலையில், அமுதவாணன் கைக்கு பெட்டி வந்துள்ளது. இதனை மணி மிக அதிகமாக சண்டையிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.