ஃபேஷனுக்காக இப்படியா உடை அணிவது? பிக்பாஸ் பிரபலத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
காற்சட்டையாக அணியும் டெனிமை மேலாடையாக அணிந்து பொது இடத்திற்கு வந்த பிக் பாஸ் பிரபலத்தின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அளவிற்கு அதிகமான கவர்ச்சி
சமீபக்காலமாக அதிகமான கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புகளை தேடி வருகிறார் பிக் பாஸ் பிரபலம் உர்பி ஜாவேத்.
இவரின் ஆடைகள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று கயிறுகள், கம்பிகள், கற்கள், உடைந்த கண்ணாடிகள், பூ இதழ்கள் போன்ற பொருட்களை ஆடையாக கொண்டு மேலாடை தயாரித்து அணிந்துவருகிறார்.
வித்தியாசமான மேலாடைகள்
இந்த நிலையில் தற்போது இவர் தன்னுடைய மேலாடையாக காற்சட்டையாக பயன்படுத்தும் டெனிமை அணிந்து வந்திருக்கிறார்கள்.
இதனை பார்ப்பதற்கு சற்று கோமாளித்தனமாக இருந்தாலும், இதனை ஃபேஷன் என்றுக் கூறிக் கொண்டு போடுவார்கள் என விமர்சகர்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்கள்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் உர்பி ஜாவேத் டெனிம் அணிந்து சென்ற வீடியோக்காட்சி பகிர்ந்துள்ளார்.
மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் "ஃபேஷன் என்ற பெயரில் அரை பைத்தியம் போல் சுற்றும் மாடல்களை என்ன செய்வது" என கலாய்க்கும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.