பிக் பாஸ் சுஜாவுக்கு திடீரென நடந்த சர்ஜரி... அதிர்ச்சியில் ரசிகர்கள்! தீயாய் பரவும் வீடியோ
பிக் பாஸ் சுஜா வருணி சமீபத்தில் ஒரு டென்டல் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார். அதை வீடியோ எடுத்து youtube சேனலில் அவர்கள் வெளியிட்டு உள்ளனர்.
அவருக்கு wisdom tooth பிரச்சனை இருக்கிறது என்றும் அதை பிடுங்குவதற்காக தான் ஒரு minor சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார் அவர்.
மருத்துவமனைக்கு செல்லும் முன் சுஜா பயத்தில் இருந்தது தொடங்கி ஹாஸ்பிடலில் இருக்கும்போது கூட அவர் வீட்டிற்கே சென்றுவிடலாம் என சொன்னது, சிகிச்சை முடிந்து கணவர் அன்பாக சுஜாவை பார்த்துக்கொள்வது வரை வீடியோவில் காட்டி இருக்கின்றனர்.
வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், ஒரு பல்லு புடுங்க இவ்ளோ அட்டகாசமா, ஓவர் பில்டப்பா இருக்கே என கூறி வருகின்றனர். மேலும் சிலர் சுஜாவை அவரது கணவர் அன்பாக பார்த்துக்கொள்ளும் விதத்தை பாராட்டி இருக்கின்றனர்.