மகளுடன் இணைந்த வனிதா: 21 வயதிலேயே இப்படியா? கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்
நடிகை வனிதா விஜயகுமார் தற்போது இயக்கி நடிக்கும் புதிய படத்தை தனது மகள் தான் தயாரிக்கின்றார் என வெளியிட்டுள்ள தகவல் தற்போது இணையத்தில் புதிய சர்ச்சையை கிளப்பி வருகின்றது.
வனிதா விஜய்குமார்
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவரும் மிகப் பெரிய திரைக்குடும்பத்தைச் சேர்ந்தவரும் தான் இந்த வனிதா விஜய்குமார்.
இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகின்றனர்.
முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். திருமணத்துக்குப் பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
இவர் சினிமாவில் நடித்து பிரபல்யமடைந்ததை விடவும் தனது திருமணங்களில் ஏற்பட்ட சர்ச்சைகளின் காரணமாகவே அதிகம் பிரபல்யம் அடைந்தார்.
வனிதா கடந்த 2000ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஸ்ரீஹரி மற்றும் ஜோவிதா என்று இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள்.
ஆகாஷை விவாகரத்து செய்த அவர் ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். இவருக்கு பிறந்தவர் தான் ஜெயனிதா.எனினும் மகன் விஜய ஹரியை தந்தையுடன் இருக்க நீதிமன்றம் அனுமதித்தது. அதனால் அவர் வனிதாவை விட்டு விலகி தந்தையுடன் வளர்ந்து வருகிறார்.
அதேபோல் வனிதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகள் ஜோவிகா தற்போது வனிதாவுடன் வசித்து வருகிறார்.
இதனிடையே பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார் வனிதா. தனது 3-வது திருமணம் மூலம் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் வனிதா. 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுப்பாடுகள் காரணமாக பல சர்ச்சைகளை இவர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாலும் சில வாக்குவாதங்கள் காரணமாகவும் இவர்கள் நான்கு மாதத்திலேயே இருவரும் பிரிந்து விட்டார்கள்.
பீட்டர் போல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததன் காணரணமாக கல்லீரல் பாதிப்பால் மரணமடைந்தார்.
bigg boss: பிக்பாஸ் வீட்டில் கழுதையும் தங்கப்போகிறதா? ஆரம்பிக்கும் போதே சர்சையை ஏற்படுத்திய சம்பவம்
நெட்டிசன்களின் கமெண்ட்டுகள்
இந்நிலையில் அண்மையில் கடற்கரை ஒன்றில் ராபர்ட் மாஸ்டரின் கையை பிடித்தபடி சர்ச்சை நாயகி வனிதா விஜயகுமார் Save The Date October 5 என்று வெளியிட்ட பதிவு மீண்டும் இணையத்தில் சர்சையை ஏற்பத்தியது.
வனிதாவிற்கு 4ஆவது முறை திருமணம் நடைபெற போவதாக பலரும் இந்த பதிவை தவறாக புரிந்துக்கொண்டனர்.
ஆனால் Mr & Mrs எனும் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ஜோடி போட்டு வனிதா விஜயகுமார் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைத் தான் அக்டோபர் 5ஆம் திகதி வெளியிடுவதாக கூறியிருக்கின்றார்.
நடிகை வனிதாவே அக்டோபர் 5ம் ஆம் திகதி இது குறித்து விளக்கமளித்தார். இந்தத் திரைப்படத்தை நடிகை வனிதாவே எழுதி இயக்கியுள்ளார் எனவும் இதன் போது குறிப்பிடார்.
அதில் அதிர்ச்சியளிக்கும் விடயம் என்னவென்றால், வனிதாவும் ராபர்ட் மாஸ்டரும் நடித்துள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சர்ஸ் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது, வனிதாவின் மகள் பிக்பாஸ் புகழ் ஜோவிகா தானாம்.
இந்த தகவல் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருவதுடன் ரசிகர்கள் மத்தியில் ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா துறையில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல பண்முக திறன் கொண்ட தனுஷாலேயே தனது 27வது வயதில் தான் முதல் படத்தை தயாரிக்க முடிந்தது. ஆனால், ஜோவிகா, 21 வயது ஆகும் போதே சினிமாவில் முதல் படத்தை தயாரிக்கின்றார் என இணையதளவாசிகள் கிண்டலாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |