மறுபடியும் வீடு வாங்கிய பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத்... யாருக்காக தெரியுமா?
பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் இரண்டாவது முறையாக புதிய வீடு வாங்கி தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அனிதா சம்பத்
அனிதா சம்பத்தை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்தளவுக்கு சின்னத்திரையிலும் வெள்ளித்திரையில் மக்களுக்கு அதிக பரிச்சயமானவர்.

பிரபல தொலைக்காட்சியில் அழகான தூய தமிழில் செய்திகள் வாசித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யமானார்.
அது மட்டும் இன்றி டேன்னி, காலங்களில் அவள் வசந்தம்,தெய்வ மச்சான் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமன்றி தற்போது நிறைய தனியார் விளம்பரங்கள் நடிப்பது, சொந்தமான யூடியூப் பக்கம் நடந்துவது என பிஸியாக இருந்து வருகின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலந்துக்கொண்ட பின்னர் தனது முதல் சொந்த வீட்டை சில வருடங்களுக்கு முன்பு கட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போது 2வது வீட்டை வாங்கியுள்ளார்.தனது அம்மாவிற்காக புதிய வீடு வாங்கியுள்ளதாக குறிப்பிட்டு வீட்டில் பூஜை போடப்பட்ட போது எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குறித்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        