பிக்பாஸ் பிரபலம் கவினுக்கு திருமணம்.. பெண் யார் தெரியுமா? தேதியுடன் வெளியான செய்தி
பிக்பாஸ் பிரபலம் கவினின் திருமண செய்தி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பரபரப்பு ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியில் சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், மீடியா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் சின்னத்திரை பிரபலமாக கலந்து கொண்டவர் தான் நடிகர் கவின். இவர் சரவணன் மீனாட்சி தொடரில் ரக்சிதா மகாலட்சுமியுடன் நடித்து பிரபலமானவராக இருந்தார்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் வெள்ளித்திரை படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இலங்கையிலிருந்து சென்ற லாஸ்லியாவை காதலித்து வந்தார்.
கவினுக்கு திருமணம் எப்போது?
ஆனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்தவுடன் நீ யாரோ நான் யாரோ என்றிருக்கிறார்கள்.
இப்படியொரு நிலையில், தற்போது கவின் வீட்டில் பெற்றோர் பார்த்த பெண்ணை மணக்க அவர் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.
திருமணம் விரைவில் அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி நடக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள், வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |