கல்லூரி தோழியுடன் ரகசிய வாழ்க்கை நடத்திய பெண்!! கணவனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
சேலத்தில் தன்னுடைய மனைவியை காணாமல் தேடிய கணவருக்கு, கல்லூரி தோழியுடன் ரகசிய வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது.
சேலத்தை சேர்ந்த இளம்பெண் அதிதி, இவருடைய கல்லூரி கால தோழி அகல்யா.
கல்லூரி படிப்பை முடித்த அதிதிக்கு கடந்த மாதம் பெற்றோர்கள் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களிலேயே பெற்றோர் வீட்டுக்கு வந்த அதிதி, இடம்மாற்று சான்றிதழை வாங்குவதாக கூறி கல்லூரிக்கு சென்றுள்ளார்.
எனினும் நீண்ட நேரம் ஆகியும் அதிதி வீடு திரும்பாததால், அதிதியின் கணவர் மற்றும் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில், அதிதி சென்னையில் வசிப்பது தெரியவந்தது.
அவருடைய தோழியான அகல்யாவுடன் கணவன்- மனைவி போல வாழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி, பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
மேலும் தன்னுடைய கணவருடன் வாழ விருப்பமில்லை என கூறிய அதிதி, பெற்றோருடன் செல்வதாக தெரிவித்ததால் போலீசார் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.