பிக் பாஸ் யுகேந்திரன் வெளியிட்ட முதல் பதிவு... ஏற்றுக்கொள்ளவே முடியாது! குமுறும் ரசிகர்கள்
பிக் பாஸில் கலந்து கொண்டு வெளியேறிய யுகேந்திரன் முதல் பதிவு ஒன்றினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் யுகேந்திரன்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய 5 பேர் வெளியேறிய நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர்.
ஆனால் யுகேந்திரனின் வெளியேற்றத்தினை மக்கள் அவ்வளவாக ஏற்றுக்கொள்ளவில்லை. இவர் மலேசியா வாசுதேவனின் மகன் என்பதையும் தாண்டி நடிகராகவும் மக்களால் அறியப்பட்ட நிலையில், தற்போது இவரது குணத்தினையும் மக்கள் அறிந்து கொண்டுள்ளனர்.
இவரது மனைவி தனது கணவர் 2 வாரத்திற்கு மேல் இருக்க மாட்டார் என்று கூறினாலும், 4ஆவது வாரமே் வெளியேறியுள்ளார்.
இந்நிலையில் யுகேந்திரனின் இன்ஸ்டாகிராம் பதிவு வெளியாகியுள்ளது. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்பு தற்போதைய முதல் பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில், முடிந்த வரை முயற்சி செய்வோம் முடிவுகளை ஏற்றுக் கொள்வோம் என பதிவு செய்ய ரசிகர்கள் உங்களது எவிக்ஷன் ஏற்க முடியாத ஒரு விஷயம் Unfair எவிக்ஷன் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |