பிக் பாஸ் திவாகரை கம்பியால் தாக்கினாரா மா கா பா? நடிகையிடம் வாட்டர் மெலன் ஸ்டார் சர்ச்சை பேச்சு
பிக் பாஸ் திவாகர் மற்றும் மா கா பா ஆனந்த் இருவருக்கும் இடையே தற்போது பிரச்சனை எழுந்துள்ள நிலையில், திவாகர் புகார் அளித்துள்ளார்.
பிக் பாஸ் திவாகர்
பிக் பாஸ் மூலமாக பிரபலமான திவாகர் தன்னை நடிப்பு அரக்கன் என்றும் வாட்டர்மெலன் ஸ்டார் என்று தன்னைத் தானே பெருமையாக பேசி வருகின்றார்.
அடிப்படையில் இவர் ஒரு பிசியோதெரபி மருத்துவர் ஆவார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஒவ்வொரு கேமரா முன்பு நடிப்பதாக கூறி அனைவரையும் கடுப்பில் ஆழ்த்தினார்.
சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திவாகர், கானா பாலா, புகழ், மா கா பா ஆகியோர் தன்னை தாக்கியதாக புகார் கொடுத்துள்ளார்.
குடித்துவிட்டு செட்டுக்கு வருவதாகவும், இரும்பு கம்பியால் காலி அடித்ததாகவும், தனது வளர்ச்சியினை பார்தது பொறாமைபடுவதாகவும் கூறியுள்ளார்.

புகாரை மறுத்த மா கா பா
திவாகரின் புகாரை மறுத்த மா கா பா அவரைக் குறித்து பல உண்மைகளை உடைததுள்ளார். பெண்களிடம் மரியாதையாக பேச மாட்டார்... இழிவாக நடந்து கொள்கின்றார்.. ஏற்கனவே அவர் மீது புகார் எழுந்ததால் அவரை பிரபல ரிவி நீக்கியதற்கு நான் தான் காரணம் என்று நினைத்து வருகின்றார்.
தற்போதும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வாய்ப்பு கொடுத்த நிலையில், நடிகையிடம் என்னுடன் ஒரு நாள் இரு என்று தவறாக பேசுகின்றார். காமெடியாக பேசுவதாக கூறுகின்றார்.
நான் குடித்துவிட்டு செட்டுக்கு வந்தால் ஒரு நாள் 18 மணி நேரம் நின்று கொண்டிருக்க முடியுமா? திவாகர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம். அவரை ஊடகங்கள் பேட்டி எடுக்காமல் தவிர்ப்பது நல்லது என்று கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |