Bigg Boss: பிக் பாஸ் கேட்ட கேள்வி! கண்ணீரை அடக்கமுடியாமல் போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 12வது வாரத்தில் இருக்கும் போட்டியாளர்களிடம் பிக் பாஸ் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 4 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.
நேற்றைய தினத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரஞ்சித் வெளியேறியுள்ள நிலையில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தற்போது 12 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இதில் அன்ஷிதா, ராணவ், ஜெப்ரி, ஜாக்குலின், விஷால், மஞ்சரி மற்றும் பவித்ரா ஆகிய 7 பேர் தெரிவாகியுள்ளனர்.
இந்நிலையில் பிக் பாஸ் 12 வாரங்கள் கடந்துள்ள நிலையில் யாரை அதிகமாக மிஸ் செய்கின்றீர்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இதற்கு போட்டியாளர்கள் தங்களுக்கு பிடித்தமானவர்களை நினைத்து கண்ணீர் சிந்தியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |