Bigg Boss: கேப்டன் விஷாலை ஜாக்குலின் கேட்ட கேள்வி... பரபரப்பான ப்ரொமோ காட்சி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கட்டுமான டாஸ்க் ஒன்றினை பிக்பாஸ் கொடுத்துள்ள நிலையில் போட்டியாளர்கள் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். குறித்த நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், கடும் மோதல் நிலவி வருகின்றது.
இந்த வாரம் பிக் பாஸ் புதிதாக கட்டுமான டாஸ்க் கொடுத்துள்ளார். இந்த டாஸ்கில் வெற்றி பெறுபவர்களுக்கு நாமினேஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்க உள்ளது.
இதனால் போட்டியாளர்கள் கடுமையான வன்மையுடன் செயல்பட்டு வருகின்றனர். நேற்றைய தினத்தில் ராணவ் கையில் அடிபட்டு மருத்துவமனை வரை கொண்டு கொண்டு செல்லப்பட்டார்.
தற்போதும் போட்டியாளர்கள் ஒருவரையொருவர் சண்டையிட்டு வருகின்றனர். இதில் பிக் பாஸ் தலைவராக விஷாலை சரியாக கேள்வி எழுப்பி வருகின்றார். அதாவது பாரபட்சம் பார்த்து செயல்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |