பணப்பெட்டியுடன் வெளியேறிய பிக் பாஸ் போட்டியாளர் இவர்தான்.... ஷாக்கில் தாமரை! அதிகாரபூர்வ தகவல்
அதிகாரப்பூர்வமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து சிபி ரூ. 12 லட்சம் பெட்டியுடன் வெளியேறி உள்ளார்.
வெளியேற போவதாக சிபி அறிவித்து விட்டு தாமரையை அழைத்து பேசினார். அவருக்கு பணத்தேவை இருப்பதால் தாமரையை எடுத்து கொள்ள கூறுகின்றார்.
அவர் முடியாது என்று கூற தான் பணத்துடன் வெளியேறுவதாக அறிவித்தார்.
இந்த சீசனில் ராஜு மற்றும் பிரியங்கா தான் முதல் இடத்தை பிடிப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.
மேலும், பாவனி, தாமரை, அமீர் ஆகிய மூவரில் அமீர் நேரடியாக பைனலுக்குத் தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சியிருப்பது நிரூப் மற்றும் சிபி இருவரும்தான்.

வரும் வாரத்தில் எப்படியும் ஒருவர் வெளியேறி ஆக வேண்டும். தானோ அல்லது நிரூப்போதான் எவிக்ட் ஆவோம் என நினைத்து சிபி இந்த முடிவை எடுத்திருப்பார் போல தெரிகின்றது.
வெளியேற போவதாக அறிவித்த சிபிக்கு பிக் பாஸ் வாழ்த்து கூறி அனுப்பி வைத்தார்.

