மருத்துவமனையில் பிக் பாஸ் போட்டியாளர்.. திடீர் அறுவை சிகிச்சைக்கு காரணம் என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உடல்நிலை பிரச்சினை காரணமாக வெளியேறிய பவா செல்லத்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 100 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம், ரவீனா, நிக்ஷன், விசித்ரா என 17 பேர் வெளியேறியுள்ளனர்.
இன்னும் சில தினங்களில் பிரம்மாண்டமாக ஃபைனல் நடைபெற உள்ள நிலையில், இதில் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறிய பவா செல்லதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் பவா செல்லதுரை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உடல்நிலை சரியில்லை என்றே வெளியேறிய பவா செல்லதுரை பின்பு தனது வேலையில் கவனம் செலுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் இவருக்கு இருதய பிரச்சினை ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். ஆம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது நெஞ்சு வலிப்பதாக கூறிய பவா செல்லதுரைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாம்.
இந்த தகவல் பிக்பாஸ் ரசிகர்கள், மற்றும் திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பவா செல்லதுரை 'ஜெய்பீம்', 'ஜோக்கர்', 'வெந்து தணிந்தது காடு' , சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'ஜிகர்தண்டா 2' ஆகிய பல வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |