சிறைக்கு சென்ற ஜிபி முத்து? அடிக்க சொல்லுடா அவனை! அசீம் சுயரூபம் அம்பலம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரொமோ காட்சியில் அசீம் ஆயிஷாவை போடி என்று கூறியதைத் தொடர்ந்து ஆண் போட்டியாளரை போடா என்று கூறியுள்ளார்.
பிரபல ரிவியில் கடந்த 9ம் தேதி ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 21 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். முன்பு நடந்த சீசனில் நாட்கள் செல்ல செல்ல தான் போட்டியாளர்களின் சுயரூபம் அம்பலமாகியது.
ஆனால் தற்போது இந்த ஆறாவது சீசனில் ஆரம்பித்த 10 நாளில் அனைவரது சுயரூபமும் அம்பலமாகியுள்ளது. குறிப்பாக சீரியலில் பெண் ரசிகைகளைக் கவர்ந்த அசீம் இன்று தனது சுயரூபத்தை காட்டியுள்ளார்.
தகுதிக்கேற்ப போட்டியாளர்கள் வரிசைப்படுத்தப்படும் நிலையில், அசீம் அவ்வாறு வருசையில் நின்ற போட்டியாளர்களான ஆயிஷா, விக்ரமன் இவர்களிடம் சரமாரியாக சண்டைக்கு சென்றுள்ளார்.
முதல் ப்ரொமோ காட்சியில் ஆயிஷாவை வாடி போடி என்று பேசிய அசீம் இரண்டாவது ப்ரொமோ காட்சியில் விக்ரமனை போடா வாடா என்று பயங்கரமாக பேசியுள்ளார். அசீமின் சுயரூபத்தைக் கண்ட போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் கடும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.