வாக்குகளுக்காக கமராவை பார்த்து கையெடுத்து கூம்பிட்டு கெஞ்சிய பிரபலங்கள்! விமர்சகர்களிடம் சிக்கிய வீடியோ காட்சி
பிக் பாஸ் வீட்டிலிருக்கும் முக்கிய போட்டியாளர்களான ஆயிஷா மற்றும் ராம் கமராவை பார்த்து தங்களுக்கு வாக்களிக்குமாறு கெஞ்சிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வெளியேறிய போட்டியாளர்கள்
மக்களால் தொலைக்காட்சியில் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியில் பிக்பாஸ் முதலிடத்தை பிடிக்கிறது. இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதன்படி, ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, செரீனா, மகேஷ்வரி, நிவாஸினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சி போன்ற போட்டியாளர்கள் எட்டு வாரங்களில் வெளியேறியுள்ளார்கள்.
கமராவை பார்த்து கெஞ்சிய பிரபலங்கள்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நாமினேஷனில் சிக்கிய பிரபலங்களில் ஆயிஷாவும் ராமும் உள்ளடங்குகிறார்கள்.
இவர்கள் ஒன்பதாவது வாரத்திற்கு நுழைந்திருப்பதாகவும் மக்களை அவர்களுக்கு வாக்களிக்குமாறு கமராவை பார்த்து கெஞ்சியுள்ளார்கள்.
இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில் “ராம் பிறந்த நாள் வரைக்கும் பிக் பாஸ் விட்டில் இருக்க வேண்டுமாம். ஆகையால் அதுவரைக்கும் வாக்களிக்குமாறு” கேட்டுள்ளனர்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் 'வாக்குக்காக ஆயிஷாவையும் ராமையும் பார்த்து பிச்சையெடுக்காதீங்க' என கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
#Ayesha and #Ram Requesting People to Vote#BiggBoss #BiggBossTamil#BiggBossTamil6 pic.twitter.com/88pLXkzZ2m
— BIGG BOX TROLL (@drkuttysiva) December 6, 2022