காதலனை அறிமுகப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்! வாழ்த்துக்களுடன் வைரலாகி வரும் புகைப்படம்
காதலர் தினத்தில் தனது காதலனின் முகத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் பிக்பாஸ் போட்டியாளரான ஆயிஷா.
பிக்பாஸ் ஆயிஷா
பிரபல தொலைக்காட்சியொன்றில் சத்யா என்ற சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் ஆயிஷா. இவர் சத்யா சீரியல் நடிப்பதற்கு முன்னர் பொன்மகள் என்ற சீரியலில் நடித்திருந்தார்.
அதுவே அவரின் முதல் சீரியல். குறித்த சீரியல் இயக்குனருடன் சிறிய தகராறு காரணமாக பாதியிலே விலகிவிட்டார். பிறகுதான் சத்யா சீரியலில் புதிய கெட்டப்பில் இறங்கி மக்கள் இதயத்தில் இடம்பிடித்திருந்தார்.
இந்நிலையில் தான் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிக்குள் நுழைந்தார். பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற முதல்வாரத்திலேயே வீட்டிற்கு போக வேண்டும் அடம்பிடித்திருந்தார்.
மேலும் இவரின் இயல்பான பேச்சும், துறுதுறுவென இருக்கும் குணமும் அந்த வீட்டில் சிலருக்கும் பிடிக்காமல் போனது. அதன்பின் 60 நாளுக்கு மேல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த இவர் குறைவான வாக்குகளால் வெளியேற்றப்பட்டிருந்தார்.
ஆயிஷாவின் காதலன்
இந்நிலையில், முன்னதாக இவர் சமூக வலைத்தளங்களில் ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். குறித்த பதிவின் மூலம் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக மறைமுகமாக அறிவித்திருந்தார்.
இவ்வாறிருக்கையில், நேற்றைய தினம் காதலர் தினம் என்பதால் பல திரை பிரபலங்கள் இத்தினத்தை கொண்டாடியும், வாழ்த்து தெரிவித்தும் புகைப்படங்கள் வெளியிட்டிருந்தார்.
இதில் பிக்பாஸ் ஆயிஷா தனது காதலனை முதன்முதலாக அறிமுகப்படுத்தி காதலர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனைப்பார்த்த இணையவாசிகளும் ஆயிஷாவின் ரசிகர்களும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.