குயின்ஸியிடம் அசல் கோளார் செய்த சில்மிஷம்! ரெட் கார்டு கொடுங்க பிக்பாஸ்: கொந்தளிக்கும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் குவின்ஸியிடம் சக போட்டியாளரான அசல் கோளார் அத்துமீறி நடந்துகொண்ட விதம் பார்ப்போரை முகம் சுழிக்க செய்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கலகலப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து வருகிறது. இதுவரை எந்த சீசனிலும் இல்லாத வகையில் ஆரம்பத்திலேயே 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில், நேற்று புதுவரவாக மைனா நந்தினியும் எண்ட்ரி கொடுத்தார். தற்போது மொத்தம் 21 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டினுள் உள்ளனர்.
முதல் வார இறுதியில் எலிமினேஷன் எதுவும் இல்லாததால் போட்டியாளர்களுடன் கலகலப்பாக கலந்துரையாடினார் கமல்ஹாசன்.
அதுமட்டுமின்றி இதுவரை நடந்த 5 சீசன்களிலும் 30 நாட்களுக்கு மேல் நடக்கும் சண்டைகளும், சச்சரவுகளும் முதல் வாரத்திலேயே நடந்தை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருந்ததாக அவர் போட்டியாளர்களிடம் தெரிவித்தார்.
குயின்ஸியிடம் செய்த சில்மிஷம்
இந்நிலையில், நேற்றைய எபிசோடில் குவின்ஸியிடம் சக போட்டியாளரான அசல் கோளார் அத்துமீறி நடந்துகொண்ட விதம் பார்ப்போரை முகம் சுழிக்க செய்தது.
குவின்ஸி விக்ரமனிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அருகில் இருந்த அசல், குவின்ஸியின் கையை பிடித்து தடவிக் கொண்டே இருந்தது பார்ப்பவர்களுக்கு சற்று நெருடலாகவே இருந்தது.
அசல் கோளாறின் நடவடிக்கைகள் தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று ஏற்கனவே குவின்ஸி பலமுறை கூறியும் விடாமல் அவரை பின் தொடர்ந்து இவ்வாறு செய்துள்ளார்.
இதனை அவதானித்த ரசிகர்கள், அசல் கோளாரை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என குரல் கொடுத்து வருகின்றனர்.
This is straight up assault from Asal to Queency. She knock's his hands of at 00:04 seconds, but he still continues to harass Queency. Why these woman molesters are still kept inside? #Biggbosstamil6 pic.twitter.com/0Zu0v2wwkR
— GP.MUTHU ARMY BIGG BOSS (@GPmuthuarmy_1) October 17, 2022