அத்துமீறும் அசல் கோளாரின் அடுத்த சில்மிஷம்! ரெட் கார்டு கொடுங்க: கொந்தளிக்கும் மக்கள்
பிக்பாஸ் போட்டியாளரான அசல் கோளார் நேற்று குவின்ஸியிடம் அத்துமீறி நடந்து கொண்ட நிலையில், இன்று மகாலட்சுமியிடம் அதே செயலை செய்துள்ளது ரசிகர்களை கோபத்தில் ஆழத்திள்ளது.
பிக்பாஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த 5 சீசன்களைப் போல் அல்லாது இந்த சீசன் முழுவதும் 24 மணிநேரமும் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
இதனால் ஹவுஸ்மேட்ஸ் என்ன செய்கிறார்கள் என்பதை ரசிகர்களும் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இந்த சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்டு உள்ளனர்.
அதில் ஜிபி முத்து தான் மக்களின் பேவரைட்டாக உள்ளார். சக போட்டியாளர்களுக்கும் அவரை தான் மிகவும் பிடித்திருக்கிறது.
சில்மிஷத்தில் ஈடுபடும் அசல்
இந்த சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளர் என்றால் அது அசல் கோளாரு தான். நேற்று அவர் சக போட்டியாளரான குவின்ஸியிடம் அத்துமீறி நடந்துகொண்டதை பார்த்து நெட்டிசன்கள் கொந்தளித்தனர். இந்நிலையில், அசல் கோளார் இன்றும் தனது சேட்டையை தொடர்ந்துள்ளார்.
இன்று விஜே மகேஸ்வரியிடம் அவர் அத்துமீறி நடந்துகொண்டதை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு உடனடியாக ரெட் கார்டு கொடுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்புமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
asal ?#BiggBossTamil #BiggBossTamil6 pic.twitter.com/bVmw6Pzx2a
— LEO (@ViberPost) October 18, 2022
#AsalKolar #GPMuthuArmy #GPMuthu #BiggBoss #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBossTelugu6 #BiggBoss16 #Varisu#Thunivu pic.twitter.com/1hgHhYx9JI
— Biggboss Videos (@Biggboss_videos) October 18, 2022