அர்ச்சனாவை கொல்ல சொல்ல நீ யாரு? நிக்ஷனிடம் பாய்ந்த அர்ச்சனாவின் தந்தை
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது Freeze டாஸ்க் வைக்கப்பட்டுள்ள நிலையில், அர்ச்சனாவின் பெற்றோர் நிக்ஷனிடம் பேசியது அதிர வைத்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 78 நாட்களை கடந்து செல்கின்றது.
இந்நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு, கானா பாலா, ப்ராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ் என 13 பேர் வெளியேறியுள்ளனர்.
தற்போது 78 நாட்களை கடந்தாலும் வெற்றியாளர் யார் என்பதை இன்னும் கணிக்கவே முடியாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் ரவீனா, விசித்ரா, சரவணன் என மூன்று பேர் நாமினேஷனில் சிக்கியுள்ளனர். இந்த வாரம் தற்போது Freeze டாஸ்க் ஆரம்பமாகியுள்ளது.
அர்ச்சனா தந்தை கோபம்
அர்ச்சனாவின் தந்தை அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்த போது நிக்ஷனிடம், நிக்சன் நீங்க பேசுனதை எங்களால ஏத்துக்க முடியல. அதாவது கள்ளிப்பால் ஊத்தி அர்ச்சனாவை கொன்னுருக்க வேண்டும் என்று சொன்னிங்களே..
அதைக்கேட்டு நாங்க ரொம்ப கஷ்டப்பட்டோம் என்று கூற... அதற்கு நிக்சன் என்னது நானா அப்படி சொன்னனா? கொமடிக்கு எப்போதாவது அவ்வாறு சொல்லியிருப்பேன் என்று கூறி எஸ்கேப் ஆக நினைத்தார்.
ஆனால் அர்ச்சனா தந்தை நிக்ஷனிடம் நீங்கள் முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு தான் அவ்வாறு பேசினீர்கள்.. அது எங்களை அதிகமாக கஷ்டப்படுத்தியது.
ஆனாலும் நிக்ஷன் தனது தவறை திருத்திக் கொள்ளாமல், அடுத்தடுத்து நழுவிக்கொண்டு தான் சென்றார். அவர்கள் சென்ற பின்பு விளக்கம் அளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |