இவளைப் பார்த்தாலே எரிச்சலா இருக்கு... ஆவேசப்பட்ட ரசிகர்! பிக் பாஸ் ஐஷு தந்தையின் அதிரடி பதில்
பிக் பாஸ் வீட்டில் எல்லை மீறி காதல் செய்து வரும் ஐஷுவை ரசிகர்கள் திட்டித்தீர்த்து வரும் நிலையில், அவரது தந்தை அதற்கு பதில் கொடுத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய 5 பேர் வெளியேறிய நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் மணி மற்றும் ரவீனா ஒரு பக்கம் காதல் ஜோடியாக வலம் வரும் நிலையில், ஐஷு மற்றும் நிக்சன் புதிய காதல் ஜோடியாக வலம் வருகின்றனர்.
சமீபத்தில் இவர்கள் இருவரும் மைக்கை கழட்டி விட்டு ரொமான்டிக்காக பேசி முத்தம் கொடுத்த காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் ஐஷு தனக்கு வெளியில் காதலர் இருப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார்.
தந்தை வெளியிட்ட பதில்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஐஷுவின் செயலால் ரசிகர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். ஐஷுவின் தந்தை சில தினங்களுக்கு முன்பு காணொளி ஒன்றினை வெளியிட்ட நிலையில், நபர் ஒருவர் இவளை பார்த்தாலே இரிடேட்டிங்கா இருக்கு என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதற்கு ஐஷுவின் தந்தை, நீங்கள் 24/7 மணி நேர காட்சிகளை பாருங்கள் உங்களுக்கு பிடித்து விடும் என்று பதில் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |