கடைசியில் எவிக்ஷனில் அரங்கேறிய குளறுபடி... ஐஷுவை வெளியேற்றியது ஏன்?
பிக் பாஸ் நிகழ்ச்சி எவிக்ஷனில் கடைசி நேரத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது தற்போது வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.
இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி, மற்றும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப், ஐஷு என 8 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரத்தின் தலைவராக தினேஷ் இருந்து வரும் நிலையில் இனி வரும் நாட்கள் எவ்வாறு காணப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுவருகின்றது.
நேற்றைய தினம் மாயாவின் பிரச்சினையைக் குறித்து அதிகமாக பேசிக் கொள்ளாமல் மேலோட்டமாக பேசியது ரசிகர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் 18+ நகைச்சுவை, வினுஷாவின் பிரச்சினையை கூட பேசவில்லை. மக்களின் வாக்கெடுப்பும் இந்த முறை பொய்யாகியுள்ளது அம்பலமாகியுள்ளது.
ஆம் மக்கள் வெளியேற்ற நினைத்தவர்கள், இந்த வாரம் வெளியேற்றப்படவில்லை என்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆம் இந்த வாரம் சனிக்கிழமை வாக்கு எண்ணிக்கையில் பூர்ணிமாவே குறைந்த வாக்கு எண்ணிக்கையை பெற்று வந்தார்.
பூர்ணிமா வெளியேறினால் மாயாவிற்கு பாடம் புகட்டியிருக்கலாம். ஆனால் ஐஷுவை வெளியேற்ற அவரது குடும்பத்தில் உள்ளவர்களின் வற்புறுத்தல் தான் காரணம் என்று கூறப்படுகின்றது.
நிக்ஷன் ஐஷுவின் பிரச்சினை வெளியே பயங்கர வைரலாகியதால் பிரபல ரிவி தரப்பு இந்த முடிவை கடைசி நேரத்தில் எடுத்துள்ளதாகவும், போட்டியை தாண்டி பெற்றோர்களின் கவலையை கருத்தில் கொண்டு இந்த முடீவை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது.