பிக் பாஸ் எவிக்ஷனுக்கு பின்பு திவாகர் வெளியிட்ட முதல் காணொளி... பகீர் குற்றச்சாட்டு
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் வெளியேறிய திவாகர் முதல் காணொளியினை வெளியிட்டு தனது குற்றச்சாட்டை வைத்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியளித்துள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 8 பேர் வெளியேறியுள்ள நிலையில், நேற்றைய தினம் வெளியேறிய திவாகர் வெளியிட்டுள்ள காணொளி அனைவரின் கவனம் பெற்றுள்ளது.
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பல எதிர்பாராத நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றது. இதுவரை சென்ற சீசன்களைப் போன்று இல்லை என்று பல விடயங்களை கொண்டு வருகின்றனர்.

தற்போது வைல்டு கார்டு போட்டியாளர்களால் பிக் பாஸ் வீடு களைகட்டியுள்ளது. நேற்றைய தினம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் வெளியேறினார்.
இவர் வெளியேறுவதற்கு முன்பு விஜய் சேதுபதியிடம் வாங்கிக் கட்டினார். ஆனால் அதனை மறக்க வைக்கும் அளவிற்கு அவரிடம் முத்தும் வாங்கி விடைபெற்றார்.
திவாகரின் காணொளி
நேற்று வெளியேறிய திவாகர் எவிக்ஷனுக்கு பின்பு காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இக்காட்சியில் தன் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகள் வைக்கப்படுவதாகவும், தான் பொதுவாகத்தான் பேசியதாகவும், யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தேவையில்லாத விடயங்கள் என் மீது அவதூறாக பரப்பப்படுகின்றது. சோசியல் மீடியாவில் வளர்ந்து வரும்போது இதுபோன்ற தேவையற்ற குற்றச்சாட்டுகள் வருகின்றது. இது பொய்யான குற்றச்சாட்டு என்றும் தன் மீது தவறாக பரப்பப்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |