நான் தப்பி ஓடல... மருத்துவமனையில் இருந்து ஆர்த்தியின் கணவர் கண்ணீர் விட்டு கதறல்! நடந்தது என்ன?
பிரபல நகைச்சுவை நடிகரான கணேஷ் சாலையில் காரை மோதிவிட்டு தப்பிசென்றதாக போலீசார் அவரை தேடிய நிலையில், மனைவி ஆர்த்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவம் என்ன நடந்தது? என்ன ஆனது என தெரியாமல் இருந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் இருந்தப்படி கணேஷ் மற்றும் அவரது மனைவில் விரிவான விளக்கத்தை அளித்துள்ளனர்.
அதன்படி, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் அவரது ஹோண்டா ஜேஸ் காரை மோதி விபத்து ஆனதாகவும், அப்போது எனக்கு என்ன செய்வது தெரியாமல் மயக்க நிலையில் இருந்த போது அங்கிருந்த மக்கள் என்னை மீட்டும், மனைவியை தொடர்பு செய்ய கூறினேன் எனவும் தெரிவித்தார்.
மேலும், கணேஷ் தொடர்ந்து பேசுகையில், எனக்கு உடல் நிலை முடியவில்லை. உடம்பெல்லாம் வேர்த்துடுச்சு.. பின் ஆட்டோவில் சென்று ஹாஸ்பிட்டலுக்கு சென்றோம்.
பின்னர், போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்தனர் அப்போது முழுமையாக நடந்ததை விளக்கினோம் என ஆர்த்தி கூறினார். எல்லோரும், ஓடிட்டாங்க என பொய்யாக பேசிட்டாங்க உண்மை என்னான்னு தெரிஞ்சுக்கல.. குடிபோதையில் பண்ணிட்டனு எல்லாம் அசிங்கப்படுத்திட்டாங்க என கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.
பின், மீடியோ சகோதரர்களே என்ன நடந்தது என தெரியாமல் எதுவும் உடனே போட்டுவிடாதீங்க.. ஒரு கலைஞனை அவமானப்படுத்தாதீங்க.. மக்களுக்கு தெரியும் நல்லவனா கெட்டவனா என்று.. தயவு செய்து ஒரு கலைஞனை கலங்க வைக்க வேண்டாம்.. உண்மையை போடுங்க என கண்ணீருடன் பேசியுள்ளார்.