பிக்பாஸ் பைனலுக்கு அழைக்கப்படாத பிரபலம்: வருத்தத்தில் பதிவிட்ட டுவிட்
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 பைனல் இந்தவாரம் நடக்கவிருக்கிறது. கடந்த சீசன்களைப்போலவே இந்த சீசனிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது. இறுதி போட்டியாளர்களாக ராஜு, பிரியங்கா, பாவனி, நிரூப், அமீர் ஆகியோர் தேர்வாகினர்.அதில் யார் பிக் பாஸ் டைட்டிலை வெல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவிவருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு பிக் பாஸ் இறுதிப்போட்டியில் கடந்த சீசன்களில் பங்குபெற்ற போட்டியாளர்களை அழைப்பது வழக்கம். ஆனால் இந்த பிக் பாஸ் இறுதிப்போட்டியில் ஒருவருக்கு அழைப்பு விடுக்கவில்லையாம்.
கடந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் டைட்டிலை வென்ற நடிகர் ஆரியை இறுதிப்போட்டிக்கு அழைக்கவில்லை என அவரே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது,"நீங்க எல்லாரும் என்னை பிக் பாஸ் சீசன் 5 இறுதிபோட்டியில் பங்குகொள்வேன் என்று எதிர்பார்த்தீர்கள். நானும் இருதிப்போட்டியில் கலந்துகொண்டு ரசிகர்களையும் கமல் சாரையும் சந்திக்க ஆவலாக இருந்தேன். ஆனால் எனக்கு இந்த பிக்பாஸ் இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கவில்லை", என அவர் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் கடந்த சீசனில் வெற்றிபெற்ற ஒரு போட்டியாளரை ஏன் அழைக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
I know you guys were looking forward for me in the trophy hand over segment in this bb5 finale even I was excited to meet you guys and kamal sir again but unfortunately I wasn't invited for the show. @ikamalhaasan @vijaytelevision
— Aari Arujunan (@Aariarujunan) January 15, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

5 நிமிடத்தில் பற்களின் மஞ்சள் கறையை போக்க வேண்டுமா? சூப்பரான டிப்ஸ் 3 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022