Bigg Boss: சண்டை போடுறது, அடிச்சிக்கிறது தான் Prank-ஆ? மேடையில் கொந்தளித்த விஜய் சேதுபதி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று விஜய் சேதுபதி கடந்த வாரம் நடைபெற்ற டாஸ்க் குறித்து, சண்டைகள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது 20 போட்டியாளர்களுடன் கடந்த மாதம் 5ம் தேதி ஆரம்பமாகியது. இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
தற்போது வைல்டு கார்டு போட்டியாளர்கள் நான்கு உள்ளே சென்ற நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
நாளுக்கு நாள் பல மாற்றங்களையும், விறுவிறுப்பினைக் கொண்டு காணப்படும் இந்நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
ஆனால் இந்த சீசனில் சற்று சுவாரசியம் குறைந்துள்ள நிலையில், விஜய் சேதுபதி பயங்கரமாக பேசி வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கினார்.

முதல் ப்ரொமோ
முதல் ப்ரொமோவில் வைல்டு கார்டு போட்டியாளர்கள் தான் பெருக்கி தள்ளிடுவேன், அப்படியே கிழிச்சிடுவேன், உள்ளே போய் ஒழுக்கத்தை பற்றி வகுப்பு எடுக்கப்போறன் இப்படியெல்லாம் சொல்லிட்டு உள்ளே போனாங்க.... என்னா பண்ணி வைச்சிருக்காங்க? என்ற கேள்வியினை விஜய் சேதுபதி எழுப்பியுள்ளார்.
இரண்டாவது ப்ரொமோ
இரண்டாவது ப்ரொமோ காட்சியில் சாண்ட்ரா வரும்போது பயங்கரமாக சொடக்கு போட்டு வந்தார்... ஆனால் வந்த இரண்டாவது நாளே ஒன்னும் நடக்கவில்லை என்று சபரி கூறினார். ராக்கெட் மாதிரி ஆரம்பித்தாங்க... ஆனால் அப்படியே புஷ்னு போன மாதிரி ஆகிடுச்சி என்று வியானா கூறியுள்ளார்.
பினாயில் ஊத்தி கழுவிடுறேன் என்று கூறினார்கள் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று ரம்யா கூறியுள்ளார். இதே போன்று வினோத்தும் தனது பாணியில் ஆதங்கத்தினைக் கொட்டியுள்ளார்.
மூன்றாவது ப்ரொமோ
கம்ருதின், பிரஜன், பிரவீன் இவர்கள் விளையாட்டாக போட்ட சண்டை எத்தனை பேரை பாதித்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதில் விக்கல்ஸ், சாண்ட்ரா, கெமி, வினோத் என அனைவரும் ஆதங்கத்தில் பேசியுள்ளனர். உடனே விஜய் சேதுபதியும் கத்துறது, சண்டை போடுறது, அடிச்சிக்கிறது இதெல்லாம் பிராங்கா என கோபத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |