பிக்பாஸ் புகழ் திவ்யா கணேஷா இது? ராணி மாதிரி இருக்காங்களே!
பிக்பாஸ் சீசன் 9 இன் டைட்டில் வின்னர் திவ்யா கனேஷ் பிக்பாஸ் வெற்றிக்கு பின்னர் சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வம் காட்டிவரும் நிலையில் தற்போது இளவரசி போன்ற உடையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படு வைரலாகியுள்ளது.
நடிகை திவ்யா கணேஷ்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாக்யலட்சுமி சீரியல் பெருந்தொகையான ரசிகர்களை கொண்ட பிரபல சீரியலாக இருந்தது.

அதில் ஜெனி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றவர் தான் திவ்யா கணேஷ்.
இவர் பல தமிழ் சீரியல்களில் நடித்திருந்தாலும், பாக்கியலட்சுமி சீரியலுக்கு பிறகுதான் மக்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டார்.

இந்த நிலையில்,திவ்யாவுக்கு பிக்பாஸ் சீசன் 9 இல் கலந்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இந்த சீசனின் டைட்டில் வெற்றியாளராகவும் திவ்யா கனேஷ் தெரிவு செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து சமூக ஊடகங்களிலும் ஆக்டிவ்வாக இருந்துவரும் திவ்யா, ராணி போன்ற தோற்றத்தில், கொள்ளை அழகுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |