கனமான பணபெட்டியுடன் வெளியேறிய வியானா.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Fj உடன் காதல் வலையில் விழுந்த வியானா, கடந்த வாரங்களில் மீழ முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது.
20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கடும் விவாதங்களுக்கு மத்தியில் 11 வாரங்கள் நிறைவடைந்துள்ளன.

இதன்படி, பிரவீன் காந்தி, அப்சரா, ஆதிரை, கலையரசன், துஷார், பிரவீன், நடிப்பு அரக்கன் திவாகர், கெமி, பிரஜன், ரம்யா ஜோ மற்றும் வியானா ஆகியோர் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இடையில் 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே அனுப்பப்பட்டார்கள்.
வியானா சம்பளம் எவ்வளவு?
இந்த நிலையில், கடந்த வாரங்களில் எவிக்ஷ்ன் இல்லாத காரணத்தினால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் வைத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
வாக்குகள் அடிப்படையில் நேற்றைய தினம் ரம்யா ஜோவும், இன்றைய தினம் வியானாவும் வெளியேற்றப்பட்டுள்ளனர். 70 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த வியானாவுக்கு ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி பார்க்கும் பொழுது பிக்பாஸ் வீட்டில் இருந்த பாதி நாட்கள் சரியாக விளையாடாத வியானாவுககு இவ்வளவு சம்பளமா எனக் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |