Bigg Boss 9: நீங்க சொல்ற படியெல்லாம் பண்ண முடியாது! எகிறிய பார்வதி... கொந்தளித்த சக போட்டியாளர்கள்
வீட்டை பெருக்கும் போது சுவரில் விளக்குமாறை தட்டிய பார்வதியால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கேட்ட எதிர் அணியிட்ம் நீங்க சொல்ற மாதிரியெல்லாம் எங்களுக்கு பண்ண முடியாது என காட்டமாக பதிலளித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் -9
கடந்த அக்டோபர் ஐந்தாம் திகதி பிரம்பமாண்டமாக ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி, தொடக்கத்தில் இருந்தே சண்டைகளுக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிவருகின்றது.
சின்னத்திரையில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறபோதிலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் களமிறங்கினார்.
அதனை தொடர்ந்து. அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
கோபமாக கத்திய பார்வதி
பிக்பாஸ் வீட்டில் சண்டைகள் வெடித்துக் கொண்டிருக்கும் நிலையில், வீட்டை பெருக்கும் போது சுவரில் விளக்குமாறை தட்டிய பார்வதியால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கேட்ட எதிர் அணியிட்ம் நீங்க சொல்ற மாதிரியெல்லாம் எங்களுக்கு பண்ண முடியாது என காட்டமாக பதிலளித்துள்ளார்.இவ்வாறாக இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.