பிக்பாஸ் சீசன் 9ல் அதிரடி மாற்றம்- முதல் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ன் முதல் ப்ரோமோ காட்சி இன்றைய தினம் 6 மணியளவில் வெளியாகவுள்ளதாக காணொளி வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஒன்பதாவது சீசனுக்கு தயாராகி வருகின்றது.
கடந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதற்கு முதல் உள்ள சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
அதே போன்று இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை இந்தியில் சல்மான் கானும், மலையாளத்தில் மோகன்லாலும், கன்னடத்தில் சுதீப்பும், தெலுங்கில் நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.
புது அப்டேட்
இந்த நிலையில், தமிழில் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 9-ன் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், இன்றைய தினம் 6 மணியளவில் பிக்பாஸ் சீசன் 9ன் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகவுள்ளது.
வழக்கத்தை போன்று அல்லாமல் இந்த சீசனில் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை ஹாட்ஸ்டாரில் பார்க்கும் பார்வையாளர்கள், அங்கு விளையாடும் போட்டியாளர்கள் பற்றிய கருத்துக்களை நேரடியாக பதிவுச் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது என்பதால் இந்த சீசன் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னைக்கு சாயங்காலம் 6 மணிக்கு...🤗 #BiggBossSeason9 #BiggBoss9 #BB9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/TBr7h1FZ05
— Vijay Television (@vijaytelevision) September 1, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |