Bigg boss season 9: அதிரடியாக களமிறங்கும் 10 பிரபலங்கள்- சற்றுமுன் வெளியான தகவல்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தற்போது ஒன்பதாவது சீசனுக்கு தயாராகி வருகின்றது.
கடந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதற்கு முதல் உள்ள சீசன்களை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
விரைவில் பிக்பாஸின் அடுத்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளார் என்ற செய்தி வைரலாகி வருகின்றது.
இந்த நிலையில், இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள்
- குக் வித் கோமாளி உமைர்
- விஜே பார்வதி
- சீரியல் நடிகை அக்ஷிதா அசோக்
- குக் வித் கோமாளி ஷபானா
- பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா மேனன்
- நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன்
- நடிகர் பாலசரவணன்
- நடன இயக்குநர் சதீஸ் கிருஷ்ணன்
- சீரியல் நடிகர் புவி அரசு
- சீரியல் நடிகர் வினோத் பாபு
- பாடகர் பால் டப்பா
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பிரபலங்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான ஆடிஷன் நடந்துள்ளதாகவும், இதில் இருந்து கூட போட்டியாளர்கள் தேர்வாக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |