சற்று நேரத்தில் பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பம்.. ரவீந்தர் போட்ட பதிவால் அதிர்ச்சி
சற்று நேரத்தில் பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமாகவுள்ள நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் போட்ட பதிவு இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
தமிழில் கடந்த எட்டு சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒன்பதாவது சீசனை ஆரம்பிக்கவுள்ளது. எந்தவித தொலை தொடர்பு வசதிகளும் இல்லாமல் சுமாராக 100 நாட்கள் கடந்து ஒரு வீட்டில் தன்னுடைய தனி திறமையை காட்டி விளையாட வேண்டும்.
இதுவரையில் தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், இடையில் சிம்பு தொகுத்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
மலையாளத்தில் மோகன்லால், இந்தியில் சல்மான்கான், கன்னடத்தில் கிச்சா சுதீப், தெலுங்கில் நாகர்ஜூனா ஆகியோர் தொகுத்து வழங்குகின்றன.
ரவீந்தரும் இருக்கிறாரா?
இந்த நிலையில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி பிக்பாஸ் வீட்டை நேரில் சென்று பார்த்து விட்டு மெய் மறந்து போயுள்ளார்.
அச்சு அசல் பிரபல ஹோட்டல்களில் இருக்கும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரூமிற்கு அருகில் ஜக்குஸி அமைக்கப்பட்டுள்ளது. அதனை வைத்து பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு என்ன டாஸ்க் கொடுக்கப்போகிறார்கள் என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் பிக்பாஸ் சீசன் 9 மிக பிரமாண்டமாக ஆரம்பமாகவுள்ள நிலையில், கடந்த சீசன் முதல் போட்டியாளராக கலந்து கொண்ட ரவீந்தர் சந்திரசேகரன் ஒரு பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “இவரும் இருக்கிறாரா?” என சந்தேகிக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |