Bigg Boss: நீ நினைக்கிறது நான் கிடையாது... இரு துருவமாக பிரிந்த சாண்ட்ரா, திவ்யா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ஒற்றுமையாக இருந்த சாண்ட்ரா திவ்யா இடையே சண்டை எழுந்துள்ளதால், இருவரும் இரு துருவங்களாக இருக்கின்றனர்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸில் பல சுவாரசியம் அரங்கேறியுள்ளது. மொத்தம் 24 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
கடந்த நாட்களில் இரண்டு எவிக்ஷன் இருந்தது. இதில் சனிக்கிழமை ரம்யா மற்றும் ஞாயிற்றுகிழமை வியானா இருவரும் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில் இந்த வாரத்தில் வீட்டின் தலைவராக வினோத் இருந்து வருகின்றார். வினோத்தை கம்ருதின் தான் வெற்றிபெற வைத்துள்ளார்.
இதில் இவர்கள் இருவரிடையே காணப்பட்ட நட்பு பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இதுவரை ஒன்றாக சுற்றிக்கொண்டு தோழிகளாக இருந்த சாண்ட்ரா, திவ்யா இருவரும் பிரிந்துள்ளனர்.
சாண்ட்ரா திவ்யாவைக் குறித்து அமித்திடம் கோபமாக பேசியுள்ளார். இதனை சற்றும் ரசிகர்கள் எதிர்பார்க்காத நிலையில், அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பில் காணப்படுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |