Siragadikka Aasai: முத்துவுடன் சேர்ந்து நெருக்கடி கொடுக்கும் குடும்பம்... உண்மையை உடைப்பாரா மீனா?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து சீதாவிடம் மீனா எதற்காக க்ரிஷை தத்தெடுக்க வேண்டாம் என்று கூறுகின்றார் என்ற உண்மையை அறிந்து கொள்ள முயற்சிக்கின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பல சுவாரசியமான கதைகளங்களைக் கொண்டு செல்கின்றது. பெற்ற தாயே பிள்ளைகளை வெறுத்து ஒதுக்குகின்றார்.
வழக்கம் போன்று மாமியார் மருமகள் பிரச்சனையையும் கொண்டு வந்துள்ளனர். ஆனால் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் மீனா முத்து இருவரும் அசால்டாக முடித்துவிடுகின்றனர்.

ரோகினியின் முதல் திருமணம், க்ரிஷ் ரோகினியின் மகன் என்ற உண்மையை அறிந்த மீனா முத்துவிடம் சண்டை போட்டு வருகின்றார்.
சமீபத்தில் க்ரிஷை தத்தெடுக்க முடிவு செய்து மீனாவையும் அழைத்து வந்துள்ளார். ஆனால் மீனா இந்த முடிவிற்கு சம்மதிக்காமல் முத்துவிடம் சண்டைபோட்டு சென்றார். இதற்கான காரணம் தெரியாத முத்து சீதாவை பார்க்க வந்துள்ளார்.
சீதாவிடம் இதற்கான காரணத்தை கண்டறிய கூறியுள்ளார். சிதா மற்றும் அம்மா, தம்பி அனைவரும் மீனாவிற்கு நெருக்கடி கொடுத்து கேள்வி எழுப்புகின்றனர். கடைசியில் மீனா உண்மையை உடைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |