பிக்பாஸில் அரங்கேறிய ட்விஸ்ட்... பணப்பெட்டியுடன் வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா?
பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர் சபரி பணப்பெட்டியுடன் வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பணப்பெட்டி டாஸ்க் இந்த வாரம் நடைபெற்றுள்ளது.
கடந்த வாரம் ரெட் கார்டு பெற்று கம்ருதின், பார்வதி வெளியேறிய நிலையில், குறைவாக வாக்கு பெற்று சுபிக்ஷாவும் வெளியேறினார். தற்போது பிக்பாஸ் வீட்டில் சாண்ட்ரா, சபரி, வினோத், விக்ரம், அரோரா, திவ்யா என 6 பேர் இருக்கின்றனர்.
இதில் அரோரா நேரடியாக பைனலுக்கு தகுதி பெற்ற நிலையில், மீதமுள்ள ஐந்து பேர் நாமினேஷனில் உள்ளனர். இதில் யார் குறைவான வாக்கு பெற்று வெளியேறுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் இதுவரை எந்த சீசனிலும் இல்லாத சர்ச்சை இந்த பிக்பாஸ் சீசனில் இருந்துள்ளது. தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்ற நிலையில் யார் வெளியேறுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பணப்பெட்டியுடன் சபரி வெளியேறுகிறாரா?
அரோரா உள்ளே வந்த தனது தோழியிடம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்துவிடவா என்று கேட்டார். அதற்கு அவர் செருப்பு பிஞ்சிடும்... ஒழுங்காக விளையாடிவிட்டு வா என்று அவரை எச்சரித்தார்.
ஆதலால் அரோரா டிக்கெட் டூ பினாலேக்கு சென்றுள்ளதால் அவர் பணப்பெட்டி எடுக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகின்றது. மேலும் விக்ரம், சபரி இருவரும் தங்களால் டைட்டில் வெல்ல முடியுமா என்ற சந்கேத்தில் இருப்பதால், இவர்களில் ஒருவர் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே போன்று சாண்ட்ராவும் திடீரென பணப்பெட்டிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கானா வினோத் மற்றும் திவ்யா இருவரில் ஒருவர் டைட்டில் வெல்வார் என்றும் கூறப்படுகின்றது.
ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் என்னவெனில், பணப்பெட்டி டாஸ்கில் 7 லட்சத்துடன் சபரி வெளியேறியுள்ளார் என்றும் இதன் உறுதியான தகவல் நாளை தெரியவரும் என்றும் கூறப்படுகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |