பாரு வாய மூடிட்டு உட்காருங்க.. கட்டுப்பாட்டை இழந்த பிரவீன்- நெட்டிசன்கள் ரியாக்ஷன்
'பாரு வாய மூடிட்டு உட்காருங்க.." என இந்த வார தலைவரான பிரவீன் கொந்தளித்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் 5ஆம் தேதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
அதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதுவரையில், 3 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், நேற்றைய தினம் ஆதிரை நான்காவது ஆளாக வெளியேறியுள்ளார்.
ஆதிரை- எப். ஜே இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் நடத்திய காதல் லீலைகள் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது.

பார்வதி - கம்ருதீன் இருவரும் செய்யும் வேலைகளுக்கு மக்கள் அவர்கள் பக்கம் உள்ள கொந்தளிப்புக்களை வழங்கி வருகிறார்கள்.
Army camp-ஆ இது?
இந்த நிலையில், இந்த வாரத்திற்கான தலைவராக நடிகர் பிரவீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்றைய நாளுக்கான முதல் டாஸ்க் குறித்து பிரவீன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வீணாக உள்ளே வந்த பார்வதி, “ நீங்க இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை Army camp போன்று நடத்துவீர்களா?” என புதிய சர்ச்சையை கிளப்பி விடுகிறார்.

இதனால் கடுப்பான பிரவீன், பார்வதியை சமாதானம் செய்து அமர வைப்பதற்காக முயற்சி செய்கிறார். ஆனால் அவர் தொடர்ந்து பேச,கோபமான பிரவீன், “ ஆமா பார்வதி இது Army camp தான் நீங்க வாயை மூட்டுட்டு உட்காருங்க..” என்கிறார். இவற்றை பார்த்துக் கொண்டிருக்கும் மற்ற போட்டியாளர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.
இப்படி பார்வதி மற்ற போட்டியாளர்களை விளையாட விடாமல் தடுப்பது இணையவாசிகள் மத்தியில் எரிச்சலை கிளப்பி வருகிறது.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |