Bigg Boss: காதலுக்கு நியாயம் கேட்ட ஆதிரை! கூண்டில் நின்று மன்னிப்பு கேட்ட எப்ஃஜே
எதிர்நீச்சல் சீரியலில் இந்த வாரம் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்றுள்ள நிலையில், ஆதிரை தனது காதலுக்கு நியாயம் கேட்டு எப்ஃஜே-யை அதிர வைத்துள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸில் பல சுவாரசியம் அரங்கேறியுள்ளது. மொத்தம் 24 போட்டியாளர்கள் உள்ளே சென்ற நிலையில், தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த வாரம் வீட்டின் தலைவராக அமித் பார்கவ் இருந்துவரும் நிலையில் நேற்றைய தினம் பாரு, கம்ருதினை இந்த வாரம் முழுவதும் பேசக்கூடாது என்று கூறினார்.

ஆனால் வீட்டு தலைவரின் பேச்சை மதிக்காமல் பாரு சண்டை போட்டார். அமித் இவ்வாறு கூறியதற்கு காரணம் என்னவெனில், பாரு கம்ருதின் இருவரும் மைக்கை மறைத்துக் கொண்டு பேசியதற்கு பிக்பாஸ் தண்டனை கொடுத்தார்.
இதனால் வீட்டில் இருந்தவர்கள் பால், முட்டை, டீ, காபி என எதுவும் கிடைக்காமல் தவித்து வந்தனர். இதனால் வீட்டு தலையாக இந்த பொறுப்பை எடுத்தார் பார்கவ்.
இந்த வாரம் நடைபெறும் நீதிமன்ற டாஸ்கில் போட்டியாளர்களின் தனிப்பட்ட வெறுப்பினை புகாராக அளித்து சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது ஆதிரை மற்றும் எப்ஃஜே-யின் காதல் விவாகரம் பூதாகரமாக வெடித்துள்ளது.
இதற்கு நீதிபதி கொடுக்கும் தீர்ப்பு எப்ஃஜே தவறு உறுதியாகியது. இதனால் எப்ஃஜே குற்றவாளி கூண்டில் நின்றுகொண்டு ஆதிரையிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |