டிவி நிகழ்ச்சியின் போதே பார்வதி கம்ருதினை செருப்பால் அடித்த ரசிகர்கள்
டிக்கெட் டூ ஃபினாலே கார் டாஸ்கில் கம்ருதின் மற்றும் பாரு சான்றாவை தள்ளி விட்ட சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக் பாஸ் சீசன் 9
பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் இந்த வாரத்தில் டிக்கெட் டூ ஃபினாலே போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் இறுதியாக நடைபெற்ற டாஸ் தான் கார் டாஸ்க். இதில் கமருதீன் மற்றும் பார்வதி சேர்ந்து போட்டியாளர் சான்ட்ராவை காலால் எட்டி உதைத்து வெளியே தள்ளி விட்டார்கள்.
இது போட்டியாளர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருந்தது. கார் டாஸ்க் தொடங்கிய சிறுது நேரத்தில் கமருதீன், சான்ட்ராவை நோக்கி ஸ்கேம்ன்ட்ரா என்று கூறினார்.

அடுத்து கமருதீனை சான்ட்ரா, காமருதீன் என்று கூறினார். அவர்களுக்கு இடையில் நடந்த வாக்கு வாதத்தில் பார்வதி உள்ளே நுழைந்து வார்த்தைகளை விட, அது பெரிய சண்டையாக மாறியது.
இந்த சண்டை ஒரு கட்டத்தில் பெரிதாகி பார்வதி மற்றும் கமருதீன் சேர்ந்து சான்ட்ராவை காலால் எட்டி உதைக்கும் அளவிற்கு போய் விட்டது. வாக்குவாதம் நடந்ததில் முதலில் பிரச்னையை ஆரம்பித்தவர் கமருதீன் ஆனாலும் சான்ட்ராவும் வார்த்தைகளை விட்டிருக்க கூடாது.
ஆனால் வாயால் என்ன பேசினாலும் காலால் எட்டி உதைத்தது தவறு. இது தொடர்பில் ரசிகர்கள் அனைவரும் அவர்கள் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என கூறுகிறர்கள்.

வைரல் காணொளி
இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவரது வீட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்துக் கொண்டு இருந்த போது, பார்வதி மற்றும் கமருதீனை தொலைக்காட்சியில் காட்டும் போது ஷூவால் அடிப்பது போல செய்கிறார்.
இது மட்டும் இல்லாமல், தனது டிவி உடைந்தாலும் பரவாயில்லை என்றும் கூறுகிறார். இது இரண்மும் விஷம் என்றும் கூறுகின்றனர்.
உள்ளே இருக்கும் போது ரசிகர்களின் இதங்கம் இப்படி இருக்கிறது என்றால் வெளியே என்ன நிலமை என்பது போல இருக்கிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Makkal reaction...🔥🙏#BiggBossTamil9 #biggbosstamil9 pic.twitter.com/X48tMIDPN1
— ks (@ks_v209) January 2, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |