பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன்களில் இதுவரை நடக்காத ஒரு சம்பவம் வரும் வாரத்தில் நடைபெற உள்ள நிலையில், பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் 11 பேர் இந்த வார நாமினேஷனில் உள்ளனர்.
இந்த வாரத்தில் வீட்டு தலைவராக இருந்து வினோத் நன்றாக வீட்டை வழிநடத்திச் சென்றுள்ளார். இதற்கு இந்த வாரம் நிச்சயம் விஜய் சேதுபதியிடம் பாராட்டை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இந்த வார வாக்கு நிலவரப்படி ஆதிரை, அமித் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் இதில் ஒரு ட்விஸ்ட் என்னவெனில் கடந்த நாட்களில் நடைபெற்ற டாஸ்கில் வெற்றி பெற்ற குழுவிலிருந்து ஆதிரையின் பெற்றோர் உள்ளே வருவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் இவர் வாக்குஅடிப்படையில் கடைசி இடத்தில் இருப்பதால் இவர் பெற்றோர் வருவதால் பிக்பாஸ் ஆதிரையை வெளியே அனுப்பமாட்டார்கள் என்றும் கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |