Ethirneechal: கடை திறப்பு விழா இறப்பு விழாவாக மாறுமா? ஆதிகுணசேகரனின் பகை ஜெயிக்குமா?
எதிர்நீச்சல் சீரியலில் கடை திறக்கும் ஜனனியின் உயிரைப் பறிப்பதற்கு குணசேகரன் திட்டம் தீட்டியுள்ள நிலையில், ஜனனி எவ்வாறு தப்பிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் பெண்களின் அடிமைத்தனத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆணாதிக்கத்தில் கொடிகட்டி பறந்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
தம்பிகளும் குணசேகரன் கூறிய வார்த்தைக்கு தலையை ஆட்டி வரும் நிலையில், ஜனனி மற்றும் வீட்டு பெண்கள் மாமியாருக்கு உண்மையை புரிய வைத்து தனது நியாயத்தினை காண வைத்துள்ளனர்.

இதனால் மகன் குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி போலிசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் மருமகள்களின் கடை திறப்பிற்கும் தன்னால் முடிந்த பண உதவியையும் செய்துள்ளார்.
குணசேகரன் கொடுக்கும் குடைச்சல்களுக்கு மருமகள்கள் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், கடை திறப்பு விழா அன்று ஜனனியின் உயிரை எடுப்பதற்கு ஆட்களை ஏற்பாடு செய்துள்ளார்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை
சக்தி தனக்கு நடந்த நிகழ்வுகளை வைத்து பயந்து கொண்டிருக்கும் நிலையில், ஜனனி எதையும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்துடன் இருக்கின்றார்.

கொற்றவை திறப்புவிழா அன்று போலிஸ் பாதுகாப்பு வாங்கிக் கொள்ள ஜனனியிடம் கூறியுள்ளார். ஆனால் ஜனனி அதெல்லாம் வேண்டாம் என்று தவிர்த்துள்ளார். குணசேகரனின் சதியை ஜனனி எவ்வாறு முறியடிக்கப் போகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |